ADDED : மார் 05, 2024 05:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர்: மணப்பட்டு அரசு நடுநிலைப் பள்ளியில், அரியவகை மூலிகைச் செடியின் பயன்கள் மற்றும் மருத்துவ குணங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் அரிவரதன் தலைமை தாங்கினார். ஆசிரியர்கள் விவேகானந்தன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக, பாகூரை சேர்ந்த மூலிகை நிபுணர் விஜயன் கலந்து கொண்டு, அரிய வகை மூலிகை செடிகள் குறித்தும், அதன் மருத்துவ குணங்கள் குறித்தும் விளக்கி கூறினார்.
பிரைடு ஆப் புதுச்சேரி யோகா உதவி பேராசிரியர் அருள்மொழி மனத்தூய்மை, மனதை ஒருமுகப்படுத்தி கற்பதன் அவசியம் குறித்து விளக்கி, பல்வேறு யோக நிலைகள் குறித்தும் , அதற்கான பலன்கள் குறித்து செயல்முறை விளக்கம் அளித்தார். தமிழாசிரியர் சுமதி ராகவன் தொகுப்புரையாற்றினார்.
ஏற்பாடுகளை, ஆசிரியர்கள் பள்ளி ஊழியர்கள் செய்திருந்தனர்.

