ADDED : ஜூன் 18, 2025 04:47 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி மகளிர் ஆணையம் சார்பில், 'மனமது செம்மையானால்' என்ற தலைப்பில், குடும்ப மகளிரின் மனநலம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு, மகளிர் ஆணைய தலைவி நாகஜோதி தலைமை தாங்கினார். உறுப்பினர் செயலர் அமலோற்பவமேரி,உறுப்பினர்கள் சுஜாதா, அன்பரசி, சந்திரா மற்றும் நிர்வாகிகள் ஊழியர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், குடும்ப சூழலில் மகளிர் எதிர் கொள்ளும் மனநலம் சார்ந்த பிரச்னைகள், அதற்கான காரணங்கள், அதனை எதிர்கொண்டு, சமாளிக்கும் வழி முறைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள், அங்கன்வாடி பணியாளர்கள், பங்கேற்ற பயனடைந்தனர். ஏற்பாடுகளை, மகளிர் ஆணைய பணியாளர்கள் செய்திருந்தனர்.