ADDED : ஆக 11, 2025 07:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : புதுச்சேரி அரசு சுகாதாரத்துறை, குடும்ப நலம் மற்றும் மகப்பேறு குழந்தை நலம் பிரிவு இணை இயக்குநர் அலுவலகம் சார்பில், பெண் குழந்தைகளை காப்பது, மக்கள் தொகை கட்டுப்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக,மணவெளி தொகுதிக்குட்பட்ட சின்ன வீராம்பட்டினம் கிராமத்தில்நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை சபாநாயகர் செல்வம் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில், பங்கேற்ற கருத்தாளர்கள் ''பெண் குழந்தைகள் காப்போம், மக்கள் தொகை, குடும்ப கட்டுப்பாடு திட்டம் குறித்தும்,கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா பாலினம் கண்டறிவது சட்டப்படி குற்றம் ஆகியவை குறித்து, இன்னிசை பட்டிமன்றம் வாயிலான பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

