ADDED : நவ 25, 2025 05:26 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி, ராஜிவ்காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில்,உலக நுண்ணுயிர் எதிர்ப்பு வாரத்தை முன்னிட்டுவிழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு, மருத்துவ கண்காணிப்பாளர் அய்யப்பன் தலைமை தாங்கினார். மருத்துவ உள்ளிருப்பு அதிகாரி ரொசாரியோ, மக்கள் தொடர்பு அதிகாரி குருபிரசாத் முன்னிலை வகித்தனர்.நுண்ணுயிரியியல் துறை டாக்டர் வாணி கோபால், தேவையில்லாமல் ஆண்டிபயாடிக்ஸ் மருந்துகளை உட்கொள்வதால், ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கம் அளித்தார்.
தொடர்ந்து, நாடகம், பாடல் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்தன.

