ADDED : பிப் 13, 2026 06:03 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி நேரு அரசு தொழில்நுட்ப கல்லுாரி நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் 'விக்சித்த பாரத் யுவா கானக்ட்' விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
கல்லுாரி முதல்வர் நாககார்த்திகன் தலைமை தாங்கினார். மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை தலைவர் ஜஸ்டின் இசையாஸ் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக யூத் ஐகான் விருது பெற்ற அட்சயா கலந்து கொண்டு பேசினார். ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட அதிகாரி முருகன், ஒருங்கிணைப்பாளர் தில்ஹாவாஹின் ஆகியோர் செய்திருந்தனர்.

