ADDED : ஜூலை 06, 2026 03:11 AM

அ நிறம் | அளவு
வில்லியனுார்: கோர்க்காடு அரசு மேல்நிலைப் பள்ளி சார்பில்,போதைப் பொருள் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு பள்ளி துணை முதல்வர் முரளி தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் திருக்காமேஸ்வரன் வரவேற்றார்.
மங்கலம் சப் இன்ஸ்பெக்டர் பெரியசாமி மற்றும் போலீசார் போதைப்பொருள் பயன்பாட்டால் ஏற்படும் சமூக மற்றும் உடல்நல பாதிப்புகள் குறித்தும், போதை பொருள் வைத்திருந்தால் சட்டம் என்ன செய்யும் என்பது குறித்தும் மாணவர்களிடம் எடுத்து கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தமிழாசிரியர் தமிழரசி நன்றி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியைகள் மற்றும் ஊழியர்கள் செய்தனர்.
