தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஓவிய போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு

 ஓவிய போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு

 ஓவிய போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு


ADDED : ஜூலை 06, 2026 03:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 06, 2026 03:09 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி பாரதிதாசன் அறக்கட்டளை சார்பில் மன்னர்மன்னன் நினைவேந்தல் நிகழ்ச்சியையொட்டி நடந்த ஓவியப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

பாரதிதாசன் கலை இலக்கிய திங்கள் விழா மாதந்தோறும், பாவேந்தர் பாரதிதாசன் அரசு அருங்காட்சியகத்தில் நடக்கிறது. புரட்சிக்கவிஞர் போற்றிய மறுமலர்ச்சி கவிஞர் மன்னர்மன்னன் என்ற தலைப்பிலான விழாவும், பாரதிதாசன் மகன் மன்னர்மன்னன் 6ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சியொட்டி, மாணவர்களுக்கான ஓவிப்போட்டியும் நடந்தது.

பாரதி தலைமை தாங்கினார். புவனேஸ்வரி வரவேற்றார். செயலர் வள்ளி, மயூரா பன்னீர்செல்வம், சுசீலா, லட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னாள் அமைச்சர் லட்சுமிநாராயணன், எம்.எல்.ஏ.,க்கள் ஆறுமுகம், விக்னேஷ் கண்ணன் உள்ளிட்ட பலர் மன்னர்மன்னன் உருவபடத்திற்கு மலரஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து, தொண்டு புரிவோம் என்ற தலைப்பில், ஓவியப்போட்டி நடந்தது. விஜயலட்சுமி, சுகுமாறன் ஆகியோர் நடுவர்களாக இருந்து சிறந்த ஓவியங்களை தேர்வு செய்தனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அழகானந்தம் எம்.எல்.ஏ., பரிசு வழங்கினார்.

நிகழ்ச்சியை பைரவி, சரஸ்வதி, மதன், பொய்யாது, ஏகாம்பரம் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். விசாலாட்சி நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us