ADDED : ஜூலை 06, 2026 03:08 AM

அ நிறம் | அளவு
நெட்டப்பாக்கம்: கரையாம்புத்துார் கிராமத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியினை அமைச்சர் ராஜவேலு துவக்கி வைத்தார்.
நெட்டப்பாக்கம் தொகுதி, கரையாம்புத்துார் கிராமத்தில் குடிநீர் பற்றாக்குறையை போக்கும் வகையில், பொதுப்பணித்துறை சார்பில், 28 லட்சம் ரூபாய் மதிப்பில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட உள்ளது.
இப்பணியினை அமைச்சர் ராஜவேலு பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் வீரசெல்வம், கண்காணிப்பு பொறியாளர் சுந்தரமூர்த்தி, பொது சுகாதார கோட்ட செயற்பொறியாளர் சுந்தரி, கிராம குடிநீர் திட்ட இளநிலை பொறியாளர் சிவானந்தம், இளநிலை பொறியாளர் நிவேத்திகா, பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் சதாசிவம், உதவிப்பொறியாளர் பாலமுருகன், இளநிலை பொறியாளர் அய்யப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
