
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கனுார் : காட்டேரிக்குப்பம் இந்திரா காந்தி அரசு உயர்நிலைப் பள்ளியில் புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
தலைமை ஆசிரியை கவிதா தலைமை தாங்கினார்.உடற்கல்வி ஆசிரியர் பாலசங்கர்வரவேற்றார். காட்டேரிக்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் தமிழரசன் கலந்து கொண்டு, கொடியசைத்து விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தார்.
பேரணியில், ஆசிரியர்கள் பூங்கொடி, ராஜலட்சுமி, கலைவாணி, ஈஸ்வரன், வெங்கடேசன் உள்ளிட்ட மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக சென்று, பொதுமக்களுக்கு புகையிலை பயன்படுத்துவதால், ஏற்படும் பாதிப்புகள் குறித்து எடுத்துரைந்தனர்.

