ADDED : ஜன 24, 2025 05:52 AM

புதுச்சேரி: புதுச்சேரி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை, பெண்களுக்கான அதிகாரம் அளித்தல் மையம் மற்றும் மாநில நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் கடற்கரை சாலையில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
'பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்' திட்டத்தின் 10ம் ஆண்டு நிறைவையொட்டி, கடற்கரை சாலை கார்கில் போர் நினைவிடத்தில் இருந்து, காந்தி திடல் வரை நடந்த விழிப்புணர்வு நடைபயணத்தை, துறை இயக்குனர் முத்துமீனா கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இதில், பல்வேறு பள்ளி மற்றும் கல்லுாரிகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டு, பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். புதுச்சேரி நாட்டு நல திட்ட ஒருங்கிணைப்பாளர் சதீஷ்குமார், துறை உதவி இயக்குனர் சாலமன் சவரிராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பெண்களுக்கான அதிகாரம் அளித்தல் மையப் பணியாளர்கள் செய்திருந்தனர்.

