/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
/
பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
ADDED : ஜன 30, 2024 03:48 AM
புதுச்சேரி: வில்லியனுார் கஸ்துார்பா மகளிர் கல்லுாரி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
கம்பன் கலையரங்கம் எதிரில் துவங்கிய கல்லுாரி மாணவிகளின் பேரணியை சமூக நலத்துறை இயக்குநர் ராகினி துவக்கி வைத்தார். கல்லுாரி முதல்வர் செரில் முன்னிலை வகித்தார்.
தமிழ்த்துறை தலைவர் ஸ்ரீதர், சமூகப்பணித்துறை பேராசிரியர் அனுாப் அபிராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கம்பன் கலையரங்கம் எதிரில் துவங்கிய பேரணி, புஸ்சி வீதி வழியாக சென்று காந்தி சிலையை அடைந்தது.
பேரணியின்போது, பிளாஸ்டிக் பயன்பாட்டின் தீமைகள், துணி பையின் நன்கைள் குறித்து விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி சென்றனர்.
ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் ஆனந்த்ரமேஷ் செய்திருந்தார்.