ADDED : ஏப் 08, 2025 03:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம்: கரியமாணிக்கம் அங்கன்வாடி மையம் சார்பில் 'மக்களை நோக்கி' விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை, போஷான் அபியான் திட்டம் மூலம் தேசிய ஊட்டச்சத்து மாதம் கடைபிடிக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக மக்களை நோக்கி என்ற தலைப்பில் அங்கன்வாடி மையத்தின் செயல்பாடுகள் குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் கரியமாணிக்கம் கிராமத்தில் நடந்தது.
சிறப்பு விருந்தினராக திட்ட அதிகாரி நிர்மலாதேவி கலந்து கொண்டு ஊர்வலத்தை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். தொடர்ந்து தப்பாட்டம், பரதநாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் மூலம் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில், அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள், பொதுமக்கள், குழந்தைகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

