ADDED : ஆக 16, 2025 03:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருபுவனை: மதகடிப்பட்டு அடுத்த கலிதீர்த்தாள்குப்பம் காம ராஜர் அரசு கலைக் கல்லுாரியில் சர்வதேச போதைபொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
திருபுவனை காவல் நிலையம், கல்லுாரியின் போதை ஒழிப்பு பிரிவு மற்றும் உடற்கல்வித்துறை இணைந்து நடத்திய நிகழ்ச்சிக்கு கல்லுாரி முதல்வர் கனகவேல் தலைமை தாங்கினார். மண்ணாடிப்பட்டு கொம்யூன் ஆணையர் எழில்ராஜன் முன்னிலை வகித்தார். போதை ஒழிப்பு பிரிவு ஒருங்கிணைப்பாளர் பெருமாள், உடற்கல்வி இயக்குனர் அன்பழகன் வரவேற்றனர். திருபுவனை சப் இன்ஸ்பெக்டர் கதிரேசன் ஊர்வலத்தை துவக்கி வைத்தார்.
மாணவர்கள் போதை ஒழிப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பாதாகைகளை ஏந்தி சென்றனர்.