ADDED : நவ 02, 2025 03:57 AM
திருக்கனுார்: திருக்கனுார் போலீஸ் சார்பில் சர்தார் வல்லபாய் பட்டேல் 150வது பிறந்த நாளை முன்னிட்டு தேசிய ஒருமைப்பாட்டு தின விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
இன்ஸ்பெக்டர் ராஜகுமார் தலைமை தாங்கி, ஊர்வலத்தை துவக்கி வைத்தார். சப் இன்ஸ்பெக்டர் பிரியா முன்னிலை வகித்தார். திருக்கனுார் சுப்ரமணிய பாரதியார் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்று, தேசிய ஒருமைப்பாடு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். முன்னதாக, போலீஸ் ஸ்டேஷன் வந்த மாணவர்கள், போலீசாரின் அன்றாட பணிகளை பார்வை யிட்டனர்.
முன்னதாக, சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாளை முன்னிட்டு போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் உறுதிமொழி ஏற்பு மற்றும் கேக் வெட்டி இனிப்புகள் வழங்கப்பட்டது. இதேபோல் காட்டேரிக்குப்பம் போலீஸ் சார்பில், சப் இன்ஸ்பெக்டர் தமிழரசன் தலைமையில் தேசிய ஒருமைப்பாடு விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.

