தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/எச்.ஐ.வி., எய்ட்ஸ் தொழிற் கொள்கை – 2022 தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கம்

எச்.ஐ.வி., எய்ட்ஸ் தொழிற் கொள்கை – 2022 தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கம்

எச்.ஐ.வி., எய்ட்ஸ் தொழிற் கொள்கை – 2022 தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கம்


UPDATED : நவ 21, 2026 05:42 PM

ADDED : நவ 21, 2026 05:40 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 21, 2026 05:42 PM ADDED : நவ 21, 2026 05:40 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: தொழிற்சாலை, நிறுவனங்களுக்கான எச்.ஐ.வி., எய்ட்ஸ் தொழிற் கொள்கை 2022 தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கம் புதுச்சேரி அண்ணாமலை ஓட்டலில் நடந்தது.

புதுச்சேரி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க திட்ட இயக்குனர் சிவராமன் வரவேற்றார். சுகாதாரத்துறை இயக்குனர் செவ்வேள், தொழிலாளர் துறை துணை ஆணையர் சந்திரகுமாரன் ஆகியோர் கருத்தரங்கை துவக்கி வைத்து, வாழ்த்தி பேசினர்.

மத்திய அரசின் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பின் மூலம் புதுச்சேரியில் மேற்கொள்ளப்பட்டு வரும் எச்.ஐ.வி., எய்ட்ஸ் மற்றும் பால்வினை தொற்றுகள் குறித்த அடிப்படை விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள், எச்.ஐ.வி., எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு சட்டம் 2017ன் முக்கிய சட்ட அம்சங்கள் குறித்தும், நிறுவனங்களுக்கான எச்.ஐ.வி எய்ட்ஸ் தொழிற் கொள்கை 2022 பற்றிய புரிதல்கள், தொண்டு நிறுவனங்கள் மேற்கொள்ளும் தடுப்பு நடவடிக்கைகள், எச்.ஐ.வி மற்றும் காசநோய் கூட்டுத்தொற்று, அதனை கட்டுப்படுத்துகின்ற நடவடிக்கைகள் குறித்து விளக்கப்பட்டது.

இக்கருத்தரங்கில்,தொழிலாளர் துறை அதிகாரிகள், பல்வேறு தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள், புதுச்சேரி சமூக பாதுகாப்பு நலவாரியம், பல்வேறு தொழிற் சங்கம், கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள், இந்திய தொழில் கூட்டமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்க துணை இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us