ADDED : மார் 20, 2026 07:35 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் வரும் 9ம் தேதி சட்டசபை தேர்தல் நடப்பதையொட்டி, தேர்தல் துறை பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது. அதன் ஒருபகுதியாக இளம் வாக்காளர்களை ஊக்குவிக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆச்சார்யா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, மகாத்மா காந்தி முதுநிலை பல் மருத்துவ கழகத்தில் நடந்தது.
நிகழ்ச்சிக்கு சிவிப் நோடல் அதிகாரிகள் கோவிந்தசாமி, ஜீவானந்தன் ஆகியோர் தலைமை தாங்கினார். நோடல் அதிகாரிகள் நேதியா, லெனின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். என்.எஸ்.எஸ்., மாநில அதிகாரி சதீஷ் பொறுப்பான குடிமகனாக செயல்படுதல், விழிப்புணர்வுடன் வாக்களித்தல் அவசியம் குறித்து பேசினார்.
நிகழ்ச்சியில், நுாறு சதவீதம் வாக்காளர் விழிப்புணர்வு மற்றும் பங்கேற்பை உறுதி செய்தல், தவறான தகவல்கள் மற்றும் போலி செய்திகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தல், சமூக ஊடகங்களை பொறுப்புடன் பயன்படுத்துதல் உள்ளிட்டவைகள் குறித்து இளைஞர்களுக்கு விளக்கப்பட்டது.
