ADDED : மார் 24, 2025 04:24 AM

புதுச்சேரி: புதுச்சேரி, ஜிப்மர் மருத்துவமனை சார்பில் உலக காசநோய் தினத்தையொட்டி, விழிப்புணர்வு நடைபயணம் நேற்று நடந்தது.
ராஜிவ் காந்தி மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் துவங்கிய விழிப்புணர்வு நடைப்பணத்தை ஜிப்மர் துணை இயக்குனர் ரங்கபாஷியம் கொடிசையத்து துவக்கி வைத்தார்.நுரையீரல் மருத்துவ துறைத் தலைவர் தரம் பிரகாஷ் திவேதி பங்கேற்று, காசநோய் உலகளவில் ஒரு பெரும் சுகாதாரப் பிரச்னையாக உள்ளது. அதனை ஒழிக்க விழிப்புணர்வு மிக முக்கியம். இந்த நடைபயணத்தின் மூலம் மக்களுக்கு காசநோயின் அறிகுறிகள், பரிசோதனை மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென தெரிவித்தார்.
நடைப்பயணத்தில், உலக சுகாதார அமைப்பின் கருப்பொருளான 'நம்மால் காசநோயை முடிவுக்கு கொண்டு வர முடியும், உறுதி ஏற்போம், முதலீடு செய்வோம், செயல்படுத்துவோம்' என்ற அடிப்படையில் கல்ஃப் ராஜ் பில்டர்ஸ், ஈட்டன் பவர் குவாலிட்டி லிமிட்டெட், சபிக்ஷம் அபாகஸ் நிறுவனங்கள் ஆதரவு உடன் சுகாதார தொழிலாளர்கள், மாணவர்கள் பங்கேற்று மக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கினர்.ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் சிவஞானம், ரகு ஆகியோர் செய்திருந்தனர்.