ADDED : அக் 19, 2026 12:03 AM

புதுச்சேரி: புதுச்சேரி பா.ஜ., மாநில தலைமை அலுவலகத்தில் ஆயுத பூஜை விழா, மாநிலத் தலைவர் ராமலிங்கம் தலைமையில் நடந்தது.
விழாவில், எம்.எல்.ஏ., ஜான் குமார், முன்னாள் சபாநாயகர் செல்வம், மாநிலத் துணைத் தலைவர்கள் ஜெயக்குமார், அம்மாவாசை, மாநிலப் பொதுச் செயலாளர் லட்சுமி நாராயணன், முன்னாள் எம்.எல்.ஏ., அசோக் பாபு, அலுவலகச் செயலாளர் கவுரிசங்கர், மாநில ஊடகத் துறைத் தலைவர் நாகேஸ்வரன், மாநில மகளிர் அணித் தலைவர் தாமரைச்செல்வி, மாநில விவசாய அணித் தலைவர் பாரதி மோகன், வில்லியனுார் மாவட்டப் பொறுப்பாளர் வெற்றிச்செல்வம், நகர மாவட்டத் தலைவர் கிருஷ்ணராஜ், அரியாங்குப்பம் மாவட்டத் தலைவர் சுகுமார், ஆன்மிகப் பிரிவுத் தலைவர் சாய் சுதாகர், மாநில மகளிர் அணிப் பொதுச் செயலாளர் பிரியா, அரியாங்குப்பம் மாவட்டப் பொதுச் செயலாளர் அய்யனார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
