/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கல்லுாரியில் கிறிஸ்துமஸ் விழா அய்யப்பன் எம்.எல்.ஏ., பங்கேற்பு
/
கல்லுாரியில் கிறிஸ்துமஸ் விழா அய்யப்பன் எம்.எல்.ஏ., பங்கேற்பு
கல்லுாரியில் கிறிஸ்துமஸ் விழா அய்யப்பன் எம்.எல்.ஏ., பங்கேற்பு
கல்லுாரியில் கிறிஸ்துமஸ் விழா அய்யப்பன் எம்.எல்.ஏ., பங்கேற்பு
ADDED : டிச 22, 2024 07:18 AM

கடலுார் : கடலுார் சின்ன கங்கணாங்குப்பம் இமாகுலேட் மகளிர் கல்லுாரியில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழா நடந்தது.
விழாவில் வேலுார் திருச்சபை பாதிரியார் சுகம் நாயகம், பாகூர் திருச்சபை பாதிரியார் அல்போன்ஸ் சந்தானம் முன்னிலை வகித்தனர். கடலுார் தொகுதி அய்யப்பன் எம்.எல்.ஏ., சிறப்பு விருந்தினராக பங்கேற்று, பல்வேறு விளையாட்டுகளில் சாதனை படைத்த மாணவிகளை ஊக்கப்படுத்தும் வகையில் ஒரு லட்சம் ரூபாய் வழங்கினார்.
கல்லுாரி மாணவிகளுக்கிடையே நடந்த வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் வழங்கி பாராட்டினார். கல்லுாரி செயலாளர் நிர்மலா, கல்லுாரி முதல்வர், ஊராட்சி தலைவர் மாறன் பங்கேற்று பேசினர்.
விழாவில் மனிதவள அலுவலர், கல்லுாரி பேராசிரியர்கள், மாணவியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.