/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஐயப்பன் திருவிளக்கு பூஜை என்.ஆர்.காங்., பிரமுகர் பங்கேற்பு
/
ஐயப்பன் திருவிளக்கு பூஜை என்.ஆர்.காங்., பிரமுகர் பங்கேற்பு
ஐயப்பன் திருவிளக்கு பூஜை என்.ஆர்.காங்., பிரமுகர் பங்கேற்பு
ஐயப்பன் திருவிளக்கு பூஜை என்.ஆர்.காங்., பிரமுகர் பங்கேற்பு
ADDED : ஜன 02, 2025 11:09 PM

புதுச்சேரி: உழவர்கரையில் பக்த ஜனப்பிரியன் ஐயப்பன் பக்தர்கள் நடத்திய மூன்றாம் ஆண்டு ஐயப்பன் திருவிளக்கு பூஜையில் என்.ஆர். காங்., பிரமுகர் நாராயணசாமி பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தார்.
உழவர்கரை தொகுதிக்குட்பட்ட உழவர்கரைபேட் பகுதியில் எல்லை மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், பக்த ஜனப்பிரியன் ஐயப்பன் பக்தர்கள் சார்பில் மூன்றாம் ஆண்டு ஐயப்பன் திருவிளக்குபூஜை நடந்தது.
உழவர்கரை தொகுதி என்.ஆர்.காங்., பிரமுகர் டாக்டர் நாராயணசாமி கலந்துகொண்டு, தனது சொந்த செலவில்புதிய பஞ்சலோக ஐயப்பன் சிலையைவாங்கித்தந்து,சிறப்பு பூஜையில் பங்கேற்ற 200 பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினார்.
கோவில் நிர்வாகிகள், பொதுமக்கள், பக்தர்கள் மற்றும் என்.ஆர்.காங்., பிரமுகர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.