/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'பின்வாசல்' நியமனங்கள் இனி கிடையாது கோர்ட்டில் அரசு பிரமாண பத்திரம் தாக்கல்
/
'பின்வாசல்' நியமனங்கள் இனி கிடையாது கோர்ட்டில் அரசு பிரமாண பத்திரம் தாக்கல்
'பின்வாசல்' நியமனங்கள் இனி கிடையாது கோர்ட்டில் அரசு பிரமாண பத்திரம் தாக்கல்
'பின்வாசல்' நியமனங்கள் இனி கிடையாது கோர்ட்டில் அரசு பிரமாண பத்திரம் தாக்கல்
ADDED : பிப் 01, 2026 05:11 AM
புதுச்சேரியில் எந்த ஆட்சி நடந்தாலும் கொல்லைப்புற நியமனம் தொடர்கதையாகி வந்தது. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களுக்கு வேலை கொடுக்காமல், தெரிந்தவர்கள் வேலையில் அமர்த்தப்பட்டு வந்தனர்.
இந்த கொல்லைப்புற நியமனம் தொடர்பாக பொதுப்பணித் துறை வாரிசுதாரர்கள் சங்கம் சார்பில் 10 பேர் ஐகோர்ட்டில் கடந்த 2023ம் ஆண்டு நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்தனர்.
இந்த கொல்லைப்புற நியமன விவகாரத்தில் முன்னாள் தலைமை செயலர் ராஜிவ் வர்மா உள்ளிட்ட இரண்டு அரசு செயலர்கள் மீதான கோர்ட் அவமதிப்பு வழக்கு அண்மையில் முடித்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் நீதிப தி சுப்ரமணியம் பிறப்பித்த உத்தரவு:
கொல்லைப்புற நியமன விவகாரத்தில் ஏற்கனவே நடவடிக்கையைத் தொடங்கி விட்டதாகவும், அனைத்து வரன்முறைப்படுத்தும் நியமனங்கள் மற்றும் நிரந்தரப் பணி ஈர்ப்புகள், தற்போது அமலில் உள்ள பணி விதிகளின் படி மட்டுமே மேற்கொள்ளப்படும் என்றும், இனிமேல் எந்தவொரு 'பின்வாசல்' நியமனங்களும் செய்யப்பட மாட்டாது என்றும் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சமர்ப்பித்துள்ளார். இது தொடர்பாக ஒரு பிரமாணப் பத்திரமும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சுப்ரீம் கோர்ட் அரசியலமைப்பு அமர்வு மற்றும் அரசியலமைப்பு நீதிமன்றங்கள், அனைத்து நியமனங்களும் அரசியலமைப்புத் திட்டத்தின் கீழ், நடைமுறையில் உள்ள பணி விதிகளை உன்னிப்பாகப் பின்பற்றி செய்திட வேண்டும் என வலியுறுத்தியுள்ளன.
எனவே, புதுச்சேரி அரசு பொதுப்பணித் துறைக்கான ஆட்சேர்ப்பு செயல்முறையை மேற்கொள்ளும்போது, அந்த நியமனங்கள் விதிகளின்படி செய்வதை உறுதி செய்ய வேண்டும் என்று கூறுவது அவசியமற்றது.
ஏனெனில் அதுவே நடைமுறை. எந்தவொரு 'பின்வாசல்' நியமனமோ, பணி விதிகளை மீறி செய்யப்படும் வரன்முறைப்படுத்துதலோ அல்லது நிரந்தரப் பணி ஈர்ப்போ, திறமையான மற்ற விண்ணப்பதாரர்களின் உரிமைகளைப் பாதிக்கும்.
அவர்கள் அனைவரும் திறந்த போட்டித் தேர்வு முறையின் மூலம் பொது வேலைவாய்ப்பைப் பெற விரும்புபவர்கள். எனவே, புதுச்சேரி அரசு இனிவரும் காலங்களில், பொது வேலைவாய்ப்புகள் அனைத்தும் பணி விதிகள் மற்றும் அரசியலமைப்பு நியமனத் திட்டத்தின்படி கண்டிப்பாக மேற்கொள்ளவதை உறுதி செய்ய, அனைத்துத் தகுதியுள்ள அதிகாரிகளுக்கும் தேவையான சுற்றறிக்கையை வெளியிடலாம்.
யாராவது சட்டவிரோதமான அல்லது முறையற்ற நியமனங்களைச் செய்தால், அதனால் பாதிக்கப்பட்ட நபர் தகுந்த நடவடிக்கை எடுக்கக் கோரி அரசை அணுகலாம்.
இந்த அவதானிப்புகளுடன், இந்த நீதிமன்ற அவமதிப்பு மனு முடிக்கப்படுகிறது. கட்டணம் ஏதுமில்லை. இதன் விளைவாக, இதனுடன் தொடர்புடைய இதர மனுக்கள் ஏதேனும் இருந்தால், அவையும் முடிக்கப்படுகின்றன.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

