/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பாகூர் போலீசார் துப்பாக்கியுடன் ரோந்து
/
பாகூர் போலீசார் துப்பாக்கியுடன் ரோந்து
ADDED : அக் 27, 2025 12:25 AM

பாகூர்: புதுச்சேரியில் கொலை, கொள்ளை, வழிப்பறி, கஞ்சா, மாமுல் கேட்டு மிரட்டல் போன்ற சமூக விரோத செயல்கள் அதிகரித்து வருகிறது.
இதனால், சட்டம் ஒழுங்கு கேள்விக் குறியாகி வருகிறது. பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியில் சென்று வர அச்சப்படும் சூழல் நிலவுகிறது. இதற்கிடையே, கடந்த சில நாட்களுக்கு முன், நடந்த போலீஸ் உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தில், சட்டம் ஒழுங்கை காக்கவும், பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது .
அதன் எதிரொலியாக, டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம் உத்தரவின்பேரில், பாகூர் போலீசார் நேற்று முன்தினம் முதல் இரவு ரோந்து பணியினை எஸ்.எல்.ஆர்., துப்பாக்கியுடன் ஈடுபட்டு வருகின்றனர். துப்பாக்கியுடன் வாகன சோதனை மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு பொது மக்களுக்கு பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.

