/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
30 தொகுதிகளில் காங்., தேர்தல் பணி: மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தகவல்
/
30 தொகுதிகளில் காங்., தேர்தல் பணி: மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தகவல்
30 தொகுதிகளில் காங்., தேர்தல் பணி: மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தகவல்
30 தொகுதிகளில் காங்., தேர்தல் பணி: மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தகவல்
ADDED : அக் 27, 2025 12:24 AM

புதுச்சேரி: புதுச்சேரியை அழித்துவிட துடிக்கும் யாருக்கும் மக்கள் ஆதரவு அளிக்க கூடாது என, காங்., மேலிட பொறுப்பாளர் கிரீஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார்.
அவர், கூறியதாவது:
புதுச்சேரிக்கு கவர்ச்சி வார்த்தைகளை கூறி வரும் வெளியாட்களை மக்கள் அனுமதிக்கக் கூடாது. மீண்டும் லாட்டரி, சூதாட்டத்தையும் கொண்டு வர துடிக்கின்றனர். அதுபோல் நடந்தால், புதுச்சேரியின் கலாசாரம், அடையாளம் முழுமையாக அழிக்கப்படும். இது போன்ற நபர்களுக்கு அரசியல் கட்சிகள் ஆதரவு அளிக்க கூடாது.
புதுச்சேரியை போன்று சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த, கோவாவின் இன்றைய நிலைமை மிக மோசமாக மாறிவிட்டது. பள்ளி கல்லுாரிகளில் போதை பழக்கம் அதிகரித்துவிட்டது. கேசினோ அல்லது லாட்டரி மூலம் வரும் வருமானம் அரசுக்கு குறைவாக இருந்தாலும் பாதிப்பு மிக அதிகமாக இருக்கும்.
புதுச்சேரியை அழித்துவிட துடிக்கும் யாருக்கும் மக்கள் ஆதரவு அளிக்கக்கூடாது. மத்தியில் உள்ள மோடி, அமித்ஷாவின் கைப்பாவையாக புதுச்சேரி அரசு செயல்படுகிறது.
ஏற்கனவே காரைக்கால் துறைமுகத்தை அதானிக்கு தாரை வார்த்து விட்டனர். தற்போது ரூ.33 ஆயிரம் கோடி மதிப்புள்ள மின்துறையை அதானிக்கு விற்பதற்கு திட்டமிட்டு முயற்சிகள் நடக்கிறது.
புதுச்சேரியில் ஆளும் அரசு 10 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவோம் என்று வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்தனர். அதனை நிறைவேற்றவில்லை. படித்த பட்டதாரி இளைஞர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர். ஆனால் வெறும் 2,244 அரசு பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளது. 30 தொகுதிகளிலும் போட்டியிட்டு காங்., வெற்றிப் பெறக்கூடிய வகையில் தேர்தல் பணியாற்றி வருகிறோம். மீண்டும் காங்., ஆட்சிக்கு வந்தால், கவர்னர் மூலம் தொல்லை கொடுக்க முடியாது.
நீதிமன்றம் சென்று, அன்றாட நடவடிக்கைகளில் கவர்னர் தலையிடக்கூடாது என்ற தீர்ப்பை ஏற்கனவே வாங்கி வந்துள்ளோம். இதனை காட்டி அனைத்து திட்டங்களை மக்களுக்கு செய்வோம்' என்றார்.
பேட்டியின் போது காங்., தலைவர் வைத்திலிங்கம், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, வைத்தியநாதன் எம்.எல்.ஏ., உடனிருந்தனர்.

