/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தேசிய போட்டியில் பங்கேற்க இறகு பந்து வீரர்கள் தேர்வு
/
தேசிய போட்டியில் பங்கேற்க இறகு பந்து வீரர்கள் தேர்வு
தேசிய போட்டியில் பங்கேற்க இறகு பந்து வீரர்கள் தேர்வு
தேசிய போட்டியில் பங்கேற்க இறகு பந்து வீரர்கள் தேர்வு
ADDED : நவ 18, 2025 05:41 AM
புதுச்சேரி: தேசிய இறகு பந்தாட்ட சாம்பியன்ஷிப் போட்டியில், பங்கேற்க, வீரர்களுக்கான தேர்வு நாளை (18ம் தேதி) துவங்கி 22ம் தேதி வரை நடக்கிறது.
விளையாட்டு மற்றும் இளைஞர் நல இயக்குனரக துணை இயக்குநர் வைத்திநாதன் செய்திக்குறிப்பு:
2025-26ம் ஆண்டு, தேசிய இறகு பந்தாட்ட சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்க, புதுச்சேரி இறகு பந்தாட்ட வீரர்களுக்கான தேர்வு, புதுச்சேரி, உப்பளம் ராஜிவ்காந்தி உள் விளையாட்டு அரங்கத்தில் நாளை (18ம் தேதி) முதல் வரும் 22ம் தேதி வரை நடக்கிறது. அதில், 11 வயதில் முதல் 17 வயதுக்குட்பட்ட சிறுவர்கள், சிறுமிகளுக்கு 4 பிரிவுகளில் தேர்வு நடக்கிறது. புதுச்சேரியை சேர்ந்த தகுதியான வீரர்கள் கலந்து கொள்ளலாம்.