/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சாலை மேம்பாட்டு பணி: எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
/
சாலை மேம்பாட்டு பணி: எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ADDED : நவ 18, 2025 05:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர்: குருவிநத்தம் கிராமத்தில், ரூ.47.25 லட்சம் மதிப்பில் சாலை மேம்பாட்டு பணிகளை, செந்தில்குமார் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில், குருவிநத்தம் பாலுாரார் தோட்டம் மற்றும் எஸ்.ஆர்.வி. நகர் பகுதியில் ரூ.37.28 லட்சம் செலவில் சிமென்ட் சாலை, குருவிநத்தம் பாரதி நகரில் ரூ.9.97 செலவில் வடிகால் வசதியுடன் கூடிய சிமென்ட் சாலை அமைக்கப்பட உள்ளது.
இப்பணிகளை செந்தில்குமார் எம்.எல்.ஏ., பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், பாகூர் கொம்யூன் ஆணையர் சதாசிவம், உதவி பொறியாளர் பாலமுருகன், இளநிலை பொறியாளர் புனிதவதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

