/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பல்மைரா கடற்கரையில் கழிவு பொருள் மூட்டைகள்
/
பல்மைரா கடற்கரையில் கழிவு பொருள் மூட்டைகள்
ADDED : பிப் 26, 2026 05:19 AM

பாகூர்: மணப்பட்டு - மூ.புதுக்குப்பம் பல்மைரா கடற்கரையில் கிடக்கும் கழிவு பொருள் மூட்டைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்ட நிலையில், அங்கு செல்லும் சுற்றுலா பயணிகள் முகம் சுளித்து வருகின்றனர்.
கிருமாம்பாக்கம் அடுத்த மணப்பட்டு - மூ.புதுக்குப்பத்தில் பல்மைரா கடற்கரை உள்ளது. இந்த கடற்கரை வழியாக நேற்று காலை அப்பகுதி மீனவர்கள் சென்றனர்.
அப்போது, கடற்கரை நீர்பரப்பு அருகே 10க்கும் மேற்பட்ட கழிவு பொருள்மூட்டைகள்கிடந்துள்ளது. அருகில் சென்று பார்த்தபோது, அதிலிருந்து துர்நாற்றம் வீசி உள்ளது.
இது குறித்து கிருமாம்பாக்கம் போலீசாருக்கும், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்திற்கும் தகவல் தெரிவித்துள்ளனர். கழிவு பொருட்களை யாராவது கொண்டு வந்து வீசினார்களா அல்லது கப்பல்களில் இருந்து துாக்கி வீசப்பட்ட கழிவு பொருட்கள் கடல் அலையில் அடித்து வரப்பட்டு கரை ஒதுங்கியதா என்பது கேள்விக்குறியாக உள்ளது. சாக்கு மூட்டைகளில் இருந்த கழிவு பொருட்கள் வெளியே சிதறி வருவதால்,கடற்கரைக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் முகம் சுளித்து வருகின்றனர்.

