/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
துாய்மை பணி ஒகே... விளையாட்டுகள் எங்கே? சிங்கம் பார்க்கிற்கு போதுமான நிதி ஒதுக்க வேண்டும்

ADDED : பிப் 26, 2026 05:20 AM

புதுச்சேரி: சிங்கம் பார்க்கிற்கு போதுமான நிதி ஒதுக்கி மீண்டும் பழையபடி உயிர்ப்பிக்க வேண்டும்
கருவடிக்குப்பம் வாய்க்கால் அருகே 2005 ம் ஆண்டு, குழந்தைகளுக்கென ஒரு அழகிய விளையாட்டு உலகை உருவாக்கும் நோக்கில் 'சிங்கம் பார்க்' அமைக்கப்பட்டது. சறுக்கு விளையாட்டுகள், ஊஞ்சல்கள், சுற்று ராட்டினம், அழகிய செயற்கை நீரூற்று, பசுமை புல்வெளி, அமர்வதற்கான இருக்கைகள் என அனைத்தும் ஒருங்கிணைந்து, அந்தப் பூங்கா குழந்தைகளின் சொர்க்கமாகத் திகழ்ந்தது.
பள்ளி முடிந்து ஓடி வந்து விளையாடும் குழந்தைகளின் சிரிப்புகள், மாலையில் பெற்றோருடன் நடைபயிலும் குடும்பங்களின் உரையாடல்கள் - அனைத்தும் அந்தப் பூங்காவிற்கு உயிர் கொடுத்தன. ஆனால் இன்று அந்த உயிர்ப்புக்கு தடம் கூட இல்லை.
போதிய பராமரிப்பு இல்லாததால், சிங்கம் பார்க் ஒரு பாழடைந்த இடமாக மாறியது. இது தொடர்பாக 'தினமலர் நாளிதழ்' படத்துடன் செய்தி வெளியான நிலையில் தற்போது சுத்தம் செய்யப்பட்டு வருகின்றது. பொதுப்பணித் துறை ஊழியர்கள் சுத்தம் செய்து வருகின்றனர்.
இப்போது பளீச்சென சிங்கம் பார்க் காணப்பட்டாலும், குழந்தைகள் விளையாட எந்த விளையாட்டு உபகரணங்களும் மீண்டும் நிறுவப்படவில்லை. இது குழந்தைகள் முகத்தில் ஏமாற்றத்தை படரவிடுகிறது. குழந்தைகள் ஏமாற்றத்துடன் வீடு திரும்புகின்றனர்.
அலங்காரத்திற்காக அமைக்கப்பட்ட செயற்கை நீரூற்று நீண்ட காலமாக செயலிழந்து கிடக்கிறது. சிங்கம் பார்க்கிற்கு மீண்டும் நிதி ஒதுக்கி புது பொலிவுடன் உயிர்ப்பிக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.