ADDED : பிப் 26, 2026 05:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: பெரியார் நகர் அரசு தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்கான வாசிப்பு மற்றும் எண்ணறிவு விழா நடந்தது.
விழாவிற்கு, பள்ளி மேலாண்மைகுழு தலைவர் ஜமாலுதீன் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் புவனேஸ்வரி வாழ்த்தி பேசினார். விழாவில், மாணவர்கள் தங்களது கற்றல் மற்றும் எண்ணறிவு திறனை வெளிப்படுத்தினர்.
இதில், பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
ஆசிரியர்கள் பிரேமலதா, தீபகுமாரி, புஷ்பாவள்ளி, ஜெயசுதா, சசிகலா, ஊழியர்கள் அல்லி, எலிசா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

