sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/தூண்டில் முள் வளைவு திட்டம் ; கவர்னரிடம் எம்.எல்.ஏ., கோரிக்கை

தூண்டில் முள் வளைவு திட்டம் ; கவர்னரிடம் எம்.எல்.ஏ., கோரிக்கை

தூண்டில் முள் வளைவு திட்டம் ; கவர்னரிடம் எம்.எல்.ஏ., கோரிக்கை


ADDED : ஜன 05, 2024 06:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 05, 2024 06:36 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி : முத்தியால்பேட்டை தொகுதியில் மத்திய அரசின் வளர்ச்சியடைந்த பாரதம் வாகன யாத்திரை நிகழ்ச்சி நடந்தது.

கவர்னர் தமிழிசை சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். தொகுதி எம்.எல்.ஏ., பிரகாஷ்குமார் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.

அவர், கவர்னரிடம் வைத்த கோரிக்கைகள்:

முத்தியால்பேட்டை தொகுதியில் வளர்ச்சி திட்ட பணிகள் கிடப்பில் உள்ளது. இதற்கான தடைகளை நீக்கி அவற்றை உடனடியாக செயல்படுத்த ஆவண செய்ய வேண்டும்.

மீனவர்களை கடல் சீற்றத்தில் இருந்து பாதுகாக்க உடனடியாக துாண்டில் முள் வளைவு திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

தமிழக பகுதியான கோட்டகுப்பம் பகுதியில் தற்போது இந்த பணி மேற்கொண்டு வருவதால் அடுத்த பாதிப்பு சோலை நகர் வடக்கு மற்றும் தெற்கு மீனவர் பகுதிக்கு ஏற்படும். உடனடியாக இந்த பகுதிகளுக்கு துாண்டில் முள் வளைவு திட்டத்தை கொண்டு வர வேண்டும்.

முத்தியால்பேட்டை தொகுதியில் பாதாள கழிவுநீர் சாக்கடை அடைப்பு அனைத்து பகுதிகளிலும் உள்ளது. அதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். ஆதி திராவிட மக்களுக்கு திருவள்ளுவர் நகர் பகுதியில் உள்ள அரசு இடத்தில் இலவச மனை பட்டா வழங்க வேண்டும்.

சுகாதாரத் துறையின் மூலம் திருவள்ளுவர் நகர் பகுதிக்கும் சோலை நகர் பகுதிக்கும் இரண்டு துணை சுகாதார நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, எம்.எல்.ஏ., கோரிக்கை விடுத்தார்.

இக்கோரிக்கைகள் அனைத்தையும் கேட்ட கவர்னர், இது சம்பந்தமாக தலைமைச் செயலர், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை அழைத்து பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us