/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பாலா திரிபுரசுந்தரி கோவில் கும்பாபிேஷகம் கணபதி ேஹாமத்துடன் துவக்கம்
/
பாலா திரிபுரசுந்தரி கோவில் கும்பாபிேஷகம் கணபதி ேஹாமத்துடன் துவக்கம்
பாலா திரிபுரசுந்தரி கோவில் கும்பாபிேஷகம் கணபதி ேஹாமத்துடன் துவக்கம்
பாலா திரிபுரசுந்தரி கோவில் கும்பாபிேஷகம் கணபதி ேஹாமத்துடன் துவக்கம்
ADDED : ஏப் 01, 2025 04:18 AM

புதுச்சேரி: இரும்பை பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவில் கும்பாபிேஷக விழா நேற்று கணபதி ேஹாமத்துடன் துவங்கியது.
புதுச்சேரி - திண்டிவனம் நெடுஞ்சாலை, இரும்பை, குபேரன் நகரில், பாலா திரிபுர சுந்தரி அம்பாள் கோவில்புதுப்பிக்கப்பட்டு, ஸ்ரீராஜ மாதாங்கி மற்றும் ஸ்ரீவாராஹி பரிவார மூர்த்திகள் அமைக்கப்பட்டது. அதனையொட்டி வரும் 7 ம் தேதி மகா கும்பாபிேஷகம் நடைபெறவுள்ளது.
இதற்கான பூர்வாங்க பூஜை நேற்று காலை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை மற்றும் ேஷாடஷ கணபதி பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து பூர்ணாஹூதி, தீபாராதனை நடந்தது. மாலை கிராம சாந்தி நடந்தது.
இன்று 1ம் தேதி காலை 8 மணிக்கு லஷ்மி ேஹாமம், கோபூஜை, தன பூஜை, பூர்ணாஹூதி, தீபாராதனை, மாலை 6 மணிக்கு ரக்ேஷாக்ணம், யாகசாலை பிரவேசபலி நடக்கிறது.
நாளை 2ம் தேதி காலை நவக்கிரக ேஹாமம், அஸ்வ பூஜை, பூர்ணாஹூதி, மாலை வாஸ்து சாந்தி, வாஸ்து ேஹாமம், பூர்ணாஹூதி நடக்கிறது. மறுநாள் 3ம் தேதி காலை சாந்தி ேஹாமம், திசா ேஹாமம் மற்றும் தீபாராதனையும், மாலை 6 மணிக்கு மிருத்சங்கராஹணம், அங்குரார்ப்பணம், ேஷாம யாகம், ரக்ஷபந்தனம், கவுதக யாகம் நடக்கிறது.
வரும் 4ம் தேதி காலை மூர்த்தி ேஹாமம், பிரசன்னாபிேஷகம், தீர்ரத்தசங்ரஹணம், அக்னி சங்க்ரஹணம், மாலை 4 மணிக்கு மேலும் விக்னேஸ்வர பூஜையுடன் முதல் காய யாகசாலை பூஜை நடக்கிறது. தொடர்ந்து தினசரி யாக சாலை பூஜைகளை தொடர்ந்து வரும் 7 ம் தேதி விடியற்காலை 5 மணிக்கு விேஷச சாந்தி விக்னேஸ்வர பூஜை, அங்குர பூஜை, 6ம் கால யாக பூஜை, திரவ்யாஹூதி, மகா பூர்ணாஹூதி, யாத்ரா தானம், யாத்ரா ேஹாமத்தை தொடரந்து கலசம் புறப்பாடாகிறது.
தொடர்ந்து காலை 9:20 மணிக்கு ராஜகோபுரம் மற்றும் பரிவார விமானங்களுக்கும், 9:40 மணிக்கு பாலா திரிபுர சுந்தரி அம்பாளுக்கும், 9:50 மணிக்கு ஸ்ரீராஜ மாதங்கி அம்பாளுக்கும், 10 மணிக்கு ஸ்ரீவாராஹி அம்பாளுக்கும், 10:05 மணிக்கு பால பைரவருக்கும் மகா கும்பாபிேஷகம் மறறும் தீபாராதனை நடக்கிறது.
மாலை 5:00 மணிக்கு மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு அலங்காரம், உபசாரத்தை தொடர்ந்து கன்யா பூஜை, தருணி பூஜை, சுவாஷினி பூஜை, வடுக பூஜை, தீபாராதனை மற்றும் உற்சவ மூர்த்திகள் உள்புறப்பாடு நடக்கிறது.