/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சாயிபாபா கோவிலில் இன்று பாலபிேஷகம்
/
சாயிபாபா கோவிலில் இன்று பாலபிேஷகம்
ADDED : ஏப் 06, 2025 05:39 AM
புதுச்சேரி : குருமாம்பேட், பங்களா மேட்டில் அமைந்துள்ள சர்வமங்கள சாயிபாபா கோவிலில் ராம நவமியை முன்னிட்டு 108 பால் குடம் அபிேஷகம் இன்று நடக்கிறது.
புதுச்சேரி, குருமாம்பேட், பங்களா மேட்டில் சர்வமங்கள சாயி பாபா கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், ராம நவமி சிறப்பு வழிபாடு இன்று (6ம் தேதி) நடக்கிறது. இதையொட்டி, காலை 5:30 காகட ஆரத்தி, 6:00 மணிக்கு கொடி ஏற்றம் நடக்கிறது.
காலை 7.00 மணிக்கு சப்தகன்னி கோவிலில் இருந்து 108 பால் குடம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, காலை 9:00 மணிக்கு சர்வமங்கள சாயிபாபாவிற்கு அபிஷேகம் நடக்கிறது.
பக்தர்கள் அபிஷேகத்திற்கு பால், தயிர், இளநீர், கரும்புச் சாறு, பழங்கள், பூ மாலை மற்றும் பாபாவிற்கு உடை (பட்டுப் புடவை) கொண்டு வரலாம்.

