தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பாலாஜி மேல்நிலைப் பள்ளி மாநில அளவில் முதலிடம்

பாலாஜி மேல்நிலைப் பள்ளி மாநில அளவில் முதலிடம்

பாலாஜி மேல்நிலைப் பள்ளி மாநில அளவில் முதலிடம்


ADDED : மே 19, 2025 06:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 19, 2025 06:26 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: ஏம்பலம் பாலாஜி மேல்நிலைப் பள்ளி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.

பள்ளியில் தேர்வு எழுதிய 166 மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர். மாணவி தீபஸ்ரீ 497 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவிலும், பள்ளி அளவிலும் முதலிடம் பிடித்தார். மாணவி சோபனா 495 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவிலும், பள்ளி அளவிலும் இரண்டாம் இடம் பிடித்தார்.

மாணவிகள் அஷ்விணி, தக் ஷயா 492 மதிப்பெண்கள் பெற்று பள்ளியளவில் மூன்றாம் இடம் பிடித்தனர். 475க்கு மேல் 21 பேரும், 450க்கு மேல் 56 பேரும், 400க்கு மேல் 101 பேரும், சிறப்பு வகுப்பில் 126 பேரும்,முதல் வகுப்பில் 157 பேரும் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றனர்.

பாடவாரியாக ஆங்கிலத்தில் ஒருவரும், அறிவியலில்9 பேரும், சமூக அறிவியலில்6 பேரும், 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். தமிழில்3 பேரும்,கணிதத்தில் 2 பேரும் 100க்கு 99 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாணவி ஹேமலட்சுமி 593 மதிப்பெண்கள் பெற்று பள்ளியளவில் சிறப்பிடம் பிடித்தார்.

சாதனை படைத்த மாணவர்களை பள்ளி நிர்வாகி அழகப்பன் சால்வை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும், இனிப்பு வழங்கியும் பாராட்டினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us