இம்யூ., வேட்பாளர் சலீமை ஆதரித்து பாலகிருஷ்ணன் பிரசாரம்
இம்யூ., வேட்பாளர் சலீமை ஆதரித்து பாலகிருஷ்ணன் பிரசாரம்
ADDED : செப் 26, 2026 07:44 PM
புதுச்சேரி: தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில், இந்திய கம்யூ., வேட்பாளர் சலீமை ஆதரித்து, மா.கம்யூ., அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் சின்னையன்பேட்டை, வேலன் நகர் பகுதிகளில் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசுகையில், ‘தட்டாஞ்சாவடி தொகுதி முதல்வரின் தொகுதி எனக் கூறப்பட்டாலும், கடந்த 5 ஆண்டுகளில் தொகுதி மக்களின் அடிப்படை தேவைகள் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும்.
மூடப்பட்ட ரேஷன் கடைகளை மீண்டும் திறந்து புதுச்சேரி முழுதும் ரேஷன் பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆட்சியில் இருப்பவர்கள் தவறு செய்யும்போது அதனை எதிர்த்து மா.கம்யூ., கட்சி தொடர்ந்து போராடும். தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் இடதுசாரி வேட்பாளர் சலீமுக்கு மகத்தான வெற்றி கிடைக்கும் என, நம்பிக்கை உள்ளதாக தெரிவித்தார்.
