ADDED : செப் 26, 2026 07:52 PM
அ நிறம் | அளவு
காரைக்கால்: குடும்ப தகராறில் ஒருவரை தாக்கிய 2 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
காரைக்கால், பெரமசாமி பிள்ளை தெருவைச் சேர்ந்தவர் கமலக்கண்ணன், 56. இவரை குடும்ப தகராறு காரணமாக அவரது உறவினர்களான அதைப்பகுதியை சேர்ந்த குமரன், 40, சிவா, 38, ஆகியோர் தாக்கினர். காயமடைந்த அவர் அரசு மருந்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். புகாரின் பேரில், குமரன், சிவா ஆகியோர் மீது, நகர போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
