/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பாகூரில் பால்குட ஊர்வலம் ; 108 சங்காபிஷேகம்
/
பாகூரில் பால்குட ஊர்வலம் ; 108 சங்காபிஷேகம்
ADDED : பிப் 17, 2024 04:43 AM
பாகூர : உலக நன்மை வேண்டி, பாகூர் முத்தாலம்மன் கோவிலில், பால்குடம் மற்றும் 108 சங்காபிஷேகம் நடந்தது.
அதனையொட்டி, நேற்று முன்தினம் மாலை 6.00 மணிக்கு கலச ஸ்தாபனம் செய்து, உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் தீபாராதனை நடந்தது. நேற்று காலை 7.00 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, எஜமான சங்கல்பம், 108 சங்கு ஸ்தாபனம், முத்தாலம்மன் மூலமந்திர ேஹாமம் நடந்தது.
தொடர்ந்து, கோவிலில் இருந்து பால்குட ஊர்வலம் துவங்கியது. இதில்,100க்கும் மேற்பட்ட பெண்கள், பால் குடங்களை சுமந்து மாட வீதிகளில் ஊர்வலமாக சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தனர்.
அதனைத் தொடர்ந்து, உலக நன்மை வேண்டி அம்மனுக்கு பால்குடம் மற்றும் 108 சங்காபிேஷக கலசாபிஷேகம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
ஏற்பாடுகளை, அறங்காவலர் குழுவினர் மற்றும் அப்பகுதி மக்கள் செய்திருந்தனர்.