தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/பி.ஏ.எம்.எஸ்., சிறப்பு காலி இடம் தகுதிப் பட்டியல் வெளியீடு

பி.ஏ.எம்.எஸ்., சிறப்பு காலி இடம் தகுதிப் பட்டியல் வெளியீடு

பி.ஏ.எம்.எஸ்., சிறப்பு காலி இடம் தகுதிப் பட்டியல் வெளியீடு


UPDATED : நவ 25, 2026 06:38 PM

ADDED : நவ 25, 2026 06:38 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 25, 2026 06:38 PM ADDED : நவ 25, 2026 06:38 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: சென்டாக் இளநிலை நீட் பி.ஏ.எம்.எஸ். (ஆயுர்வேதம்) பட்டப்படிப்புக்கான சிறப்பு காலி இட தகுதிப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அரசு ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டிற்கான இந்தப் பட்டியல், பதிவுக் கட்டணத்துடன் விருப்பம் தெரிவித்த மாணவர்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டு, சென்டாக் இணையதளமான www.centacpuducherry.in தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

மருத்துவக் கலந்தாய்வுக் குழுவின் வழிகாட்டுதலின்படி, சென்டாக் 3-ம் சுற்று அல்லது காலி இட ஒதுக்கீட்டுப் பட்டியலில் இடம்பெற்ற மாணவர்கள் அதாவது சேர்ந்தவர்கள் மற்றும் சேராதவர்கள், எம்.சி.சி. அல்லது ஆயுஷ் 3–ம் சுற்றில் சேர்க்கை பெற்ற மாணவர்கள், மேலும் எம்.சி.சி., அல்லது ஆயுஷ் காலி இட அல்லது சிறப்பு காலி இட ஒதுக்கீட்டுப் பட்டியலில் இடம்பெற்ற மாணவர்கள் ஆகியோர் இந்தத் தகுதிப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இந்தப் பட்டியல் தொடர்பாக ஏதேனும் ஆட்சேபனைகள் இருப்பின், மாணவர்கள் தங்களது உள்நுழைவுப் பக்கத்தில் உள்ள கிரீவன்சஸ் பிரிவு மூலம் இன்று 26ம் தேதி காலை 10:00 மணிக்குள் தெரிவிக்கலாம் என சென்டாக் ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us