UPDATED : நவ 28, 2026 08:14 PM
ADDED : நவ 28, 2026 08:12 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி.: திப்புராயப்பேட்டை பகுதியில் ரவுடி ஊரில் நுழைய தடை விதிக்கக் கோரி, கலெக்டருக்கு போலீசார் பரிந்துரை செய்துள்ளனர்.
புதுச்சேரி, திப்புராயப்பேட்டையை சேர்ந்தவர் ரமேஷ் மகன் அசோக், 30. ரவுடியான இவர் மீது அடிதடி, கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், தற்போது ஜாமினில் ஊருக்கு வந்துள்ள ரவுடி அசோக் மூலம் திப்புராயப்பேட்டை பகுதியில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் சூழல் நிலவுகிறது.
ஆகையால், அவரை ஊரில் நுழைய தடை விதிக்கக்கோரி, ஒதியஞ்சாலை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் அனில்குமார் மற்றும் போலீசார், அவர் மீது வழக்குப் பதிந்து கலெக்டருக்கு பரிந்துரை செய்துள்ளனர்.
