UPDATED : நவ 28, 2026 08:14 PM
ADDED : நவ 28, 2026 08:12 PM
புதுச்சேரி: புதுச்சேரி அரசு சார்பில் ஆன்லைன் மூலம் வருவாய்த்துறை சான்றிதழ்கள் வழங்கப்படுவதற்கு அசோக் ஆனந்த் எம்.எல்.ஏ., பாராட்டு தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கை:
புதுச்சேரி அரசு வருவாய்த்துறையின் பல்வேறு சான்றிதழ்களை ஆன்லைன் வாயிலாக பெற்றுக் கொள்ளும் வகையில் செயல்படுத்தப்பட்டுள்ள நடைமுறை மிகவும் வரவேற்கத்தக்கது. தற்போது ‘serviceplus’ இணையதளம் வாயிலாக ஆன்லைனில் சான்றிதழ்களை பெறும் வசதி ஏற்படுத்தப்பட்டிருப்பது பொது மக்களின் சிரமங்களை குறைத்துள்ளது. இதுவரை 16,500 சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்திருப்பது திட்டத்தின் வெற்றியையும், வரவேற்பையும் வெளிப்படுத்துகிறது.
இந்த நடைமுறையால் மக்களின் நேரம், பணம் மற்றும் தேவையற்ற அலைச்சல் தவிர்க்கப்படுகிறது. சான்றிதழ் வழங்கும் நடைமுறையில் வெளிப்படைத்தன்மை, விரைவான சேவை மற்றும் பொறுப்புணர்வு உறுதி செய்யப்படுகின்றன.
இத்தகைய மக்கள் நலன் சார்ந்த புதுமையான திட்டத்தை செயல்படுத்தி, பொதுமக்களின் நீண்டகால சிரமங்களை குறைத்துள்ள முதல்வர் ரங்கசாமி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
எதிர்காலத்திலும் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு இத்தகைய சான்றிதழ்கள் அனைத்தும் ஆன்லைன் வாயிலாக பெறும் நடைமுறையை அரசு தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
