/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வாழை உற்பத்தி தொழில்நுட்பம் திருக்கனுாில் பயிற்சி முகாம்
/
வாழை உற்பத்தி தொழில்நுட்பம் திருக்கனுாில் பயிற்சி முகாம்
வாழை உற்பத்தி தொழில்நுட்பம் திருக்கனுாில் பயிற்சி முகாம்
வாழை உற்பத்தி தொழில்நுட்பம் திருக்கனுாில் பயிற்சி முகாம்
ADDED : ஜூலை 08, 2025 12:27 AM

திருக்கனுார்: திருக்கனுார் பண்ணைத்தகவல் மற்றும் ஆலோசனை மையம் சார்பில் ஆத்மா திட்டத்தின் கீழ் வாழையில் உற்பத்தித்திறனை அதிகரிக்க சீரிய தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சி முகாம் நடந்தது.
வேளாண் அலுவலர் தமிழ்ச்செல்வன் வரவேற்றார். இணை வேளாண் இயக்குநர் சிவசண்முகம், துணை வேளாண் இயக்குநர் குமரவேல் முன்னிலை வகித்தனர்.
காரைக்கால் அரசு வேளாண் கல்லுாரி டீன் சங்கர் மண் பரிசோதனை, மண் மாதிரி எடுக்கும் முறைகள், மண் பரிசோதனையின் அவசியம் குறித்தும், வேளாண் கல்லுாரி பேராசிரியர் சுந்தரம், வாழை சாகுபடி தொடர்பான நோய் தாக்கம் மற்றும் தடுப்பு நடவடிக்கை குறித்து விளக்கம் அளித்தார். இயற்கை விவசாயி காசிநாதன் இயற்கை வேளாண்மை குறித்து பேசினார்.
இதில், திருக்கனுார், செட்டிப்பட்டு, கூனிச்சம்பட்டு, சோம்பட்டு, மணலிப்பட்டு உள்ளிட்ட பலர் கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை உதவி வேளாண் அலுவலர் தங்கத்துரை, ஆத்மா திட்ட வட்டார மேலாளர் ஜெயச்சந்திரன் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.