sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

புதுச்சேரி அரசை கண்டித்து 'பந்த்' ; அ.தி.மு.க., அன்பழகன் அழைப்பு

/

புதுச்சேரி அரசை கண்டித்து 'பந்த்' ; அ.தி.மு.க., அன்பழகன் அழைப்பு

புதுச்சேரி அரசை கண்டித்து 'பந்த்' ; அ.தி.மு.க., அன்பழகன் அழைப்பு

புதுச்சேரி அரசை கண்டித்து 'பந்த்' ; அ.தி.மு.க., அன்பழகன் அழைப்பு


ADDED : மார் 08, 2024 06:43 AM

Google News

ADDED : மார் 08, 2024 06:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : புதுச்சேரி அரசை கண்டித்து நடக்கும் 'பந்த்'போராட்டத்தில் பங்கேற்க, புதுச்சேரி மாநில அ.தி.மு.க., செயலாளர் அன்பழகன் அழைப்பு விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை:

சிறுமி கொலை சம்பவத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் குறைந்தபட்ச மனிதாபிமானத்தை இழந்து நடந்து கொண்டது தவறானது. நேரில் வருகை தந்து அஞ்சலி செலுத்த முடியாத, பல்வேறு அண்டை மாநில தலைவர்களும், தங்களது கண்டனத்தையும், இரங்கலையும் தெரிவித்துள்ளனர்.

தேசிய அளவில் நெஞ்சை உலுக்கிய சம்பவத்தில், சிறுமியின் உடலுக்கு புதுச்சேரி அரசில் இருந்து ஒரு அமைச்சர் கூட நேரில் வந்து அஞ்சலி செலுத்தாதது, இவர்களை எப்படி எடுத்துக் கொள்வது என்றே தெரியவில்லை.

சபாநாயகரோ, அரசின் சார்பில் குறைந்தபட்சம் கலெக்டர் கூட மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்த வரவில்லை.

சிறுமி உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த கவர்னரை காங்., கட்சியும் அதன் கூட்டணியில் உள்ள சில அமைப்பினரும், திட்டமிட்டு அவமரியாதை செய்தது தவறானது. குழந்தையின் மரணத்தை வைத்து விளம்பர அரசியலில் ஈடுபட்ட காங்., செயல் கண்டிக்கத்தக்கது.

குற்றவாளிகளுக்கு காலம் தாழ்த்தாமல் உரிய விசாரணை நடத்தி மரண தண்டனை வழங்க வேண்டும்.

சிறுமியின் பாலியல் வன்முறை படுகொலைக்கு நீதி கேட்டும், போதைப் பொருள் விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்காத ஆளும் அரசை கண்டித்தும், அ.தி.மு.க., சார்பில் இன்று நடக்கும் 'பந்த்' போராட்டத்திற்கு அனைத்துத் தரப்பினரும், ஆதரவு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us