ADDED : ஜூலை 08, 2026 02:01 AM

அ நிறம் | அளவு
திருபுவனை: நல்லுார் அரசு தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்கான இலவச வங்கி கணக்கு தொடங்கும் சிறப்பு முகாம் நடந்தது.
முகாமில் மதகடிப்பட்டு இந்தியன் வங்கி கிளை மேலாளர் ராம்குமார் மற்றும் வங்கியின் வணிக தொடர்பாளர் கவுசல்சல்யா தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் பங்கேற்று, மாணவர்களின் விண்ணப்பங்களை சரிபார்த்து அவர்களுக்கு ஜீரோ பேலன்ஸ் கணக்குகளை தொடங்கி வைத்தனர்.முகாமில் 50 மாணவர்கள் வங்கி கணக்குகளை தொடங்கினர். தலைமையாசிரியை ரேவதி பேசுகையில், 'மாணவர்களுக்கிடையே சிறு வயது முதலே சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துவதே இதன் நோக்கம்' என்றார்.
