/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வங்கியாளர்கள் குழுமம் கலந்தாய்வு கூட்டம்
/
வங்கியாளர்கள் குழுமம் கலந்தாய்வு கூட்டம்
ADDED : டிச 20, 2024 04:20 AM

புதுச்சேரி: மாநில வங்கியாளர்கள் குழுமம் சார்பில், கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
தலைமைச் செயலக கூட்ட அரங்கில் நடந்த கூட்டத்திற்கு, மாநில வங்கியாளர்கள் குழுமத்தின் தலைவர் ஷிவ் பஜ்ரங் சிங், தலைமை தலைமை தாங்கினார். அரசு செயலர் முத்தம்மா, கலெக்டர் குலோத்துங்கன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுத்துறை, தனியார் துறை வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களின் மூத்த அதிகாரிகள், அரசு துறைகளின் இயக்குனர்கள் பங்கேற்றனர்.
புயல், மழையால் பாதிக்கப்பட்ட வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களின் வாடிக்கையாளர்களுக்கு, பேரிடர் நிவாரண உதவித்தொகை, அரசு மூலம் வழங்கப்படும் எந்த ஒரு தொகைக்கும் பிடித்தம் செய்யாமல் பொதுமக்களுக்கு வழங்குதல். சில்லரை கடன்களுக்கு, பிரீ குளோசர் கட்டணங்களை ரத்து செய்வது, காப்பீட்டு செயல்முறையை விரைந்து முடிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.