/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
/
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
ADDED : ஜன 13, 2026 06:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: நகரப் பகுதியில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பேக்குகளை நகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
புதுச்சேரி நகராட்சிக்குட்பட்ட உப்பளம், பாரதி, காந்தி வீதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரிபேக்குகள், பிளாஸ்டிக் கிளாஸ்கள் விற்பனை மற்றும் பயன்படுத்தும் மதுபான பார்கள் மற்றும் உணவகங்களில் புதுச்சேரி நகராட்சி சுகாதார அதிகாரி ஆர்த்தி தலைமையில் நேற்று மாலை திடீர் சோதனையில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.
இதில் நான்கு கடைகளில் இருந்த தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரிபேக்குகள்,கிளாஸ்களை பறிமுதல் செய்து விற்பனையில் ஈடுபட்ட கடைக்கார்களுக்கு அபராதம் விதித்தனர்.

