மரப்பாலம் சந்திப்பில் பேனர் சரிந்து விழுந்ததால் பரபரப்பு
மரப்பாலம் சந்திப்பில் பேனர் சரிந்து விழுந்ததால் பரபரப்பு
ADDED : ஆக 21, 2026 06:30 AM

புதுச்சேரி: புதுச்சேரி மரப்பாலம் சந்திப்பில் வைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட பேனர் ஒன்று திடீரென சரிந்து விழுந்ததால் பரபரப்பு நிலவியது.
புதுச்சேரி மரப்பாலம் சந்திப்பு எப்போதும் பரபரப்பாகக் காணப்படும். இந்த சந்திப்பில், இருசக்கர வாகனங்களும், கார்களும் தொடர்ச்சியாக சென்று வரும். இந்நிலையில் மரப்பாலம் சந்திப்பில் வைக்கப்பட்டிருந்த பேனர் நேற்று இரவு பெய்த கனமழைக்கு ஈடுக்கொடுக்க முடியமால் சரிந்து மதில் சுவர் பக்கம் சாய்ந்தது.
அப்போது அவ்வழியாக சென்ற பொதுமக்கள், இருசக்கர வாகன ஓட்டிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
ராட்சத பேனர் சுவருக்குப் பின்னால் விழுந்தது எனக கருதி கடந்து விட முடியாது. விளம்பர பேனர்கள் வைக்கும் அளவுக்குக் காட்டும் ஆர்வத்தை, அதன் பாதுகாப்பிலும், சட்டப்பூர்வ அனுமதியிலும் காட்டாதது ஏன். பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகளின் உயிரோடு விளையாடும் இந்த 'பேனர் கலாசாரம்' எப்போது முடிவுக்கு வரும்.
மழை மற்றும் காற்று வீசும் நேரங்களில் முறையான பலமில்லாமல் வைக்கப்படும் இதுபோன்ற பேனர்கள் ஆபத்தானவையாக மாறுகின்றன.
சம்பந்தப்பட்ட அதிகாரிகளும், பேனர் வைப்பவர்களும் இனியாவது விழித்துக்கொள்ள வேண்டும். உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் வைக்கப்படும் சட்டவிரோத பேனர்களை உடனடியாக அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். விபத்து நடந்த பிறகு இழப்பீடு வழங்குவதை விட, விபத்து நடக்கும் முன்பே தடுத்து நிறுத்துவதே உண்மையான நிர்வாகம்.
உங்கள் சுயவிளம்பரம் உங்களுக்கு முக்கியமாக இருக்கலாம். ஆனால் மக்களின் உயிர் விலைமதிப்பற்றது என்பதை உணர்ந்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
