தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பல்கலை துணைவேந்தர் அலுவலகம் முற்றுகை

பல்கலை துணைவேந்தர் அலுவலகம் முற்றுகை

பல்கலை துணைவேந்தர் அலுவலகம் முற்றுகை


ADDED : ஆக 20, 2026 11:43 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 20, 2026 11:43 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நிதி மேலாண்மை கையாளுவதில் தவறு நடந்துள்ளதாக ஏ.பி.வி.பி., மாணவர் அமைப்பினர் துணைவேந்தர் அலுவலகத்தை நேற்று மாலை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இப்போராட்டத்தில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். அவர்கள், மாணவர்களிடமிருந்து வசூலிக்கும் பணத்தை தனது அலுவலகத்தை ஆடம்பரமாக கட்டமைப்பதில் கோடிக்கணக்கில் செலவு செய்யும் துணை வேந்தர், மாணவர்களின் அடிப்படை உரிமைகளான விடுதி உணவு,  குடிநீர் தட்டுப்பாடு, போதிய வசதிகள் இல்லாத தங்கும் விடுதி, உள்ளூர் மாணவர்களுக்கான பஸ் வசதி, நவீனப்படுத்தாத ஆய்வகங்கள், உதவித்தொகை கொடுப்பதில் தாமதம், விளையாட்டு வீரர்களுக்கு குறைந்த ஊக்கத்தொகை போன்ற உரிமைகளுக்கு கவனம் செலுத்துவதில்லை.

ஆடம்பரமாக கட்டப்படும் துணைவேந்தர் அலுவலகத்தை உடனடியாக நிறுத்த வேண்டும். பல்கலைக்கழக மானிய குழு  சார்பாக குழு அமைத்து நிதி மேலாண்மையில் ஏற்பட்டுள்ள தவறுகளை விசாரிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரி பல்கலைக்கழக அமைப்பின் தலைவர் சூர்யா சரவணன் தலைமையில் மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us