ADDED : ஆக 20, 2026 11:33 PM
அ நிறம் | அளவு
பண்ருட்டி, ஆக. 21–
பண்ருட்டி அருகே வயிற்றுவலி யால் ஆட்டோ மொபைல் கடை உரிமையாளர் துாக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
பண்ருட்டி திருவதிகை வாலக்கார தெருவை சேர்ந்தவர் ராமசந்திரன், 44; ஆட்டோ மொபைல் கடை வைத்திருந்தார். குடப்பழக்கம் உள்ளவர். வயிற்று வலிக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று வயிற்று வலி அதிகமானதால் குடிபோதையில் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து பண்ருட்டி போலீசில் அவரது மனைவி அளித்த புகாரில், இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்.
