தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பொது இடங்களை பள்ளி விளையாட்டு மைதானமாக பயன்படுத்த முடிவு:கள ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய கல்வித் துறை உத்தரவு

பொது இடங்களை பள்ளி விளையாட்டு மைதானமாக பயன்படுத்த முடிவு:கள ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய கல்வித் துறை உத்தரவு

பொது இடங்களை பள்ளி விளையாட்டு மைதானமாக பயன்படுத்த முடிவு:கள ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய கல்வித் துறை உத்தரவு


UPDATED : செப் 21, 2026 11:16 PM

ADDED : செப் 21, 2026 07:11 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 21, 2026 11:16 PM ADDED : செப் 21, 2026 07:11 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: பொது இடங்களை விளையாட்டு மைதானங்களை பயன்படுத்த முடிவு செய்துள்ள பள்ளி கல்வித் துறை இது தொடர்பாக அனைத்து பள்ளிகளும் ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் உடற்பயிற்சி, விளையாட்டு மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களின் அணுகுமுறை வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், பள்ளிக் கல்வி இயக்கம் முக்கிய முடிவினை எடுத்து அனைத்து பள்ளிகளும் அவசர சுற்றிக்கை அனுப்பியுள்ளது.

இந்த சுற்றறிக்கையில், சொந்தமாக விளையாட்டு மைதானம் மற்றும் சாய்தள வசதி இல்லாத அரசுப் பள்ளிகள், உடனடியாக அருகிலுள்ள பொது விளையாட்டு மைதானங்கள் அல்லது பொது இடங்களை அடையாளம் கண்டு பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. அந்த சுற்றறிக்கையின் முக்கிய அம்சங்கள்:

அடையாளம் காணுதல்:

சொந்தமாக மைதான வசதி இல்லாத பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், தங்கள் பள்ளிக்கு அருகில் உள்ள நகர்ப்புற, கிராமப்புற பொது மைதானங்கள், பிற அரசு நிறுவனங்களின் மைதானங்கள், உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ள திறந்தவெளிகள் அல்லது இதர பொருத்தமான பொது இடங்களை பள்ளி விளையாட்டு மைதானமாக பயன்படுத்தி கொள்ள உடனடியாகக் கண்டறிய வேண்டும்.

பாதுகாப்பிற்கு முன்னுரிமை:

மைதானங்களைத் தேர்வு செய்யும்போது மாணவர்களின் பாதுகாப்பிற்கு முதன்மை முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். அந்த மைதானங்கள் பள்ளிக்கு மிக அருகில், மாணவர்கள் எளிதில் செல்லக்கூடிய வகையில் இருக்க வேண்டும். மேலும், ஆசிரியர்களின் கண்காணிப்பின் கீழ் மாணவர்கள் பாதுகாப்பாக விளையாடுவதை உறுதி செய்ய வேண்டும்.

ஒருங்கிணைப்பு:

தேர்ந்தெடுக்கப்பட்ட மைதானங்களை மாணவர்கள் தவறாமல் பயன்படுத்துவதற்கு, சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் அல்லது அரசுத் துறைகளிடம் இருந்து முறையான அனுமதியை தலைமை ஆசிரியர்கள் ஒருங்கிணைந்து பெற வேண்டும்.

அறிக்கை சமர்ப்பித்தல்:

அடையாளம் காணப்பட்ட மைதானத்தின் இருப்பிடம், பள்ளியிலிருந்து அதன் தொலைவு மற்றும் மாணவர் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த முழு விவரங்களையும் கல்வித் துறை அதிகாரிகள் மூலம் இயக்ககத்திற்குச் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், இது தொடர்பான இணக்க அறிக்கையை சம்பந்தப்பட்ட ஆய்வு அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

எத்தனை பள்ளிகள்:

இந்தத் திட்டத்தின்க கீழ் பொது விளையாட்டு மைதானங்களுடன் இணைக்கப்பட வேண்டிய 120 அரசுப் பள்ளிகளின் பட்டியலையும் கல்வித் துறை வெளியிட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்கால், மாகே மற்றும் ஏனாம் ஆகிய நான்கு பிராந்தியங்களிலும் உள்ள தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள் மற்றும் உயர்நிலைப் பள்ளிகள் இதில் அடங்கும். புதுச்சேரி பிராந்தியத்தில் புதுப்பாளையம், நெல்லித்தோப்பு, காலாப்பட்டு, தேங்காய்த்திட்டு, தட்டாஞ்சாவடி, முத்தியால்பேட்டை, உப்பளம், அரியான்கூப்பம், பாகூர், வில்லியனூர், திருக்கனூர் உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள பள்ளிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

காரைக்கால் பிராந்தியத்தில், கீழக்கசாக்குடி, தளத்தெரு, திருநள்ளாறு, நெடுங்காடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகள் இதில் இடம்பெற்றுள்ளன. இதேபோல், மாகே மற்றும் ஏனாம் பகுதிகளில் அரசுத் தொடக்க மற்றும் உயர்நிலைப் பள்ளிகளும் இந்த இணைப்பிற்காகப் பட்டியலிடப்பட்டுள்ளன.

பள்ளிக் கல்வி இயக்ககத்தின் இந்த நடவடிக்கை, போதிய இடவசதி இல்லாத பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கவும், அவர்களது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் பெரிதும் உதவும் என கல்வியாளர்கள், பெற்றோர்களும் வரவேற்றுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us