புதுச்சேரி லைட் ஹவுஸ்சில் பார்வையாளர்களுக்கு இலவசம்
புதுச்சேரி லைட் ஹவுஸ்சில் பார்வையாளர்களுக்கு இலவசம்
ADDED : செப் 21, 2026 07:03 PM

புதுச்சேரி: லைட் ஹவுஸ் தினத்தை முன்னிட்டு புதுச்சேரி லைட் ஹவுஸ்சில் நேற்று பார்வையாளர்கள் இலவசமாக அமைதிக்கப்பட்டனர்.
இந்திய அரசின் துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர் வழிகள் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சென்னை லைட் ஹவுஸ் மற்றும் லைட்ஷிப் இயக்ககம் சார்பில், ஆண்டு தோறும் செப்டம்பர் 21ம் தேதி லைட் ஹவுஸ் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, புதுச்சேரி, வம்பாக்கீரப்பாளையம், லைட் ஹவுஸ்சில் நேற்று பார்வையாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அனைவருக்கும் எந்தவிதக் கட்டணமும் இன்றி இலவசமாகப் பார்வையிட சிறப்பு அனுமதி வழங்கப்பட்டது.
மேலும், லைட் ஹவுஸ் வளாகத்தில் பள்ளி மாணவர்களின் கலைத் திறனை ஊக்குவிக்கும் வகையில் சிறப்பு ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
லைட் ஹவுஸ் தினத்தை முன்னிட்டு பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரையிலும், மதியம் 2:30 மணி முதல் மாலை 5:30 மணி வரையில் இலவசமாக லைட் ஹவுஸ் மீது ஏறி சென்று கடல் அழகை பார்வையிட்டு மகிழ்ந்தனர்.
சாதாரண நாட்களில், லைட் ஹவுஸ் பார்வையிட உள்ளூர் மக்களுக்கு ரூ.12, சுற்றுலா பயணிகளுக்கு ரூ.30 மற்றும் கேமராவிற்கு ரூ.30 கட்டணம் வசூலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
