/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அனுமதியின்றி பேனர்: 9 பேர் மீது வழக்கு
/
அனுமதியின்றி பேனர்: 9 பேர் மீது வழக்கு
ADDED : அக் 31, 2024 12:20 AM
புதுச்சேரி: வில்லியனுாரில் அனுமதியின்றி பேனர் வைத்த 9 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
புதுச்சேரியில் தடையை மீறி ஏராளமான பேனர்கள் வைக்கப்படுகிறது. குறிப்பாக டிராபிக் சிக்னல்கள், பொது இடங்களில் விளம்பர பேனர்கள் வைப்பதால், விபத்து மற்றும் போக்குவரத்து பிரச்னைகள் ஏற்படுகிறது.
புதுச்சேரி முழுதும் வைக்கப்பட்டுள்ள பேனர்கள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில் வில்லியனுார் மணவெளியில் பொது இடத்தில் அனுமதியின்றி வைத்த பேனர்களை பொதுப்பணித்துறை அதிகாரிகள் அகற்றினர்.
பேனர் வைத்தவர்கள் மீது பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் வில்லியனுார்போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில்போலீசார் 9 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.