/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அனுமதியின்றி பேனர்: ஒப்பந்ததாரர் மீது வழக்கு
/
அனுமதியின்றி பேனர்: ஒப்பந்ததாரர் மீது வழக்கு
ADDED : மார் 16, 2025 11:45 PM
புதுச்சேரி: அனுமதியின்றி பேனர் வைத்த பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
புதுச்சேரியில் அனுமதியின்றி டிஜிட்டல் பேனர், கட் அவுட் வைப்பதற்கு தடை விதிக்கப்பட்டு, சாலைகளில் அனுமதி இல்லாமல் பேனர் வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நேற்று முன்தினம் அண்ணா சாலை - ஆம்பூர் சாலை சந்திப்பில் போக்குவரத்திற்கு இடையூறாகவும், நடைப்பாதையை ஆக்கிரமித்தும் வரவேற்பு பேனர்கள்வைக்கப்பட்டு இருந்தன.
தேசிய நெடுஞ்சாலை துறை செயற்பொறியாளர் சீனிவாசன் புகாரின்பேரில், அனுமதியின்றி பேனர் வைத்த புதுச்சேரியை சேர்ந்த பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர் கோபி, 30; என்பவர் மீது ஒதியஞ்சாலை போலீசார்வழக்குப் பதிந்துள்ளனர்.
இதேபோல், உருளையன்பேட்டை மறைமலையடிகள் சாலை -வெங்கடாசுப்பா ரெட்டியார் சிலை சந்திப்பு பகுதிகளில் அனுமதியின்றி பேனர் வைத்திருந்த கோபி மீது உருளையன்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்தனர்.